அதிமுகவிலிருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். கடந்த ஜூலை மாதம் அவர் அதிமுகவிலிருந்து விலகியிருந்தார்.
சிங்கை ராமச்சந்திரன் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கோவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

