தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் இன்று முதல் செப்டம்பர் 9-ம் தேதி மாலை வரை இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை யுபிஐ (UPI) முறை மூலமாகவும் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
சார்பதிவாளர், நகராட்சி ஆணையர், முதுநிலை வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.




