தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தை பாமக ஆதரிக்கவில்லை என அக்கட்சியின் எம்.எல்.ஏ கணேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்தை முதலமைச்சர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பாகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வருவது தமிழ்நாட்டில் இருவேறு நிலைப்பாடுகள் இருப்பது போன்ற சூழலை உருவாக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.



