தமிழ்நாடு அரசு சார்பில் முதலீட்டாளர்கள் மாநாடு நாளை சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்விற்கு முதலமைச்சர் விஜய் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டின் போது புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் முதலீட்டு உத்திகளை மதிப்பீடு செய்யவும், கொள்கை அறிவிப்புகளை வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியாக மாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவும் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.




