தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிப்பதாக அவர் கூறினார்.
தொகுதி மறுவரையறையால் பாதிப்பு ஏற்படும் என்பதை இந்தியாவிலேயே முதன்முதலில் சுட்டிக்காட்டியவர் மு.க.ஸ்டாலின் என்று அவர் குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறையினால் தமிழ்நாடு எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.



