பெங்களூரு பன்னேர்கட்டா சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை சமையலறையில் காலாவதியான உணவுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உணவுப் பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில், காலாவதியான ரவை, ஐசிங் சுகர், மைதா, பேக்கரி பொருட்கள் மற்றும் கெட்டுப்போன பிரெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மருத்துவமனை சமையலறையிலேயே இத்தகைய தரமற்ற மற்றும் காலாவதியான பொருட்கள் பயன்படுத்தப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




