தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் குறைந்து காணப்பட்டது. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் விலை மீண்டும் உயர்ந்து, ஆயிரத்து 280 ரூபாய் அதிகரித்துள்ளது.

