140 கோடி மக்களின் சக்தியுடன் இந்தியா பல்வேறு துறைகளில் புதிய உயரங்களை எட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் இந்த வளர்ச்சிப் பயணம் இன்னும் வேகமெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
காலனிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும் துணிச்சலையும் இந்த நாளில் நினைவு கூர வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும்போது புதிய உத்வேகம் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார்.




