காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பிய நடிகர் மம்முட்டி, வழி தெரியாமல் தவித்தபோது அவருக்கு கிராமத்து நபர் ஒருவர் உதவியுள்ளார். நள்ளிரவில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் தனது இருசக்கர வாகனத்தில் முன்னால் சென்று, நடிகர் மம்முட்டிக்கு அவர் சரியான பாதையைக் காட்டியுள்ளார்.
இந்த உதவியால் நெகிழ்ச்சியடைந்த நடிகர் மம்முட்டி, தனது காரை விட்டு கீழே இறங்கி அந்த நபரை அன்புடன் கட்டி அணைத்துக்கொண்டார். பின்னர் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


