அமெரிக்க விசா நேர்காணல் நடைமுறையில் புதிய மாற்றங்களை அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி, பிறந்த குழந்தைகள் முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்கள் அனைவரும், விசா நேர்காணலின் போது தங்கள் பெற்றோருடன் நேரில் ஆஜராக வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன்பு இந்த வயது வரம்பினருக்கு வழங்கப்பட்டிருந்த நேர்காணல் விலக்குகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, விசா விண்ணப்பதாரர்கள் அனைவரும் இனி நேர்காணல் மையத்திற்கு நேரில் வருவது அவசியமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



