மங்களூரு கே.எஸ்.ராவ் சாலையில் உள்ள கே.எஃப்.சி உணவகத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்குக் கெட்டுப்போன கோழிக்கறி வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
உணவகத்திலிருந்து உணவு மாதிரிகளைச் சேகரித்த அதிகாரிகள், அவற்றை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



