மத்திய கொல்கத்தாவின் மிர்சா காலிப் தெருவில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஆறு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை அடங்குவர். இந்த விபத்தில் காயமடைந்த மற்ற ஆறு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட மீட்புப் பணியில், சுமார் 60 பேர் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




