தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் புதிய மருத்துவத் திட்டங்களை அறிவித்துள்ளார். இதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 471 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தரைத்தளம் மற்றும் 14 தளங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்கப்படும்.
மேலும், முதற்கட்டமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தரைத்தளம் மற்றும் 8 தளங்களுடன் கூடிய மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

