சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சீர்காழி மீனவர் கொலை விவகாரம் தொடர்பாக தாங்கள் அளித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கடந்த ஐந்து நாட்களாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவைக்கு வெளியே அதிமுக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

