கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கக் கோரி, கல்லூரிக் கல்வி இயக்குநரகம் பிறப்பித்திருந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆகஸ்ட் 17 அன்று வெளியிடப்பட்டிருந்த முந்தைய கடிதம் ரத்து செய்யப்படுவதாக கல்லூரிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
கல்லூரிக்கல்வி ஆணையர் சார்பில் இணை இயக்குநர் பி. சிந்தியா செல்வி இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த உத்தரவில், முந்தைய கடிதம் திரும்பப் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

