மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை பாறை மற்றும் மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் நாளை (ஆகஸ்ட் 20) தற்காலிகமாக மூடப்படுகின்றன. நிர்வாக காரணங்களுக்காக காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தத் தலங்களுக்குப் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை சென்னை வட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

