இந்தியாவின் ரகசிய ஏவுகணை உற்பத்தித் திட்டங்களில் பங்கேற்க தனியார் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) அழைப்பு விடுத்துள்ளது. அக்னி ரக ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் அணு ஆயுத ஏவுகணைகளைத் தயாரிக்கும் பிரிவில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு டாடா (TATA) மற்றும் சோலார் ஏரோஸ்பேஸ் (Solar Aerospace) போன்ற முன்னணி நிறுவனங்கள் போட்டியிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


