கேரளத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அரசு மதுபானக் கடை ஊழியர்களுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் 50 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தற்காலிகப் பணியாளர்களுக்கு 6 ஆயிரத்து 250 ரூபாய் ஊக்கத்தொகையும், தனியார் மூலம் பணியமர்த்தப்பட்ட பாதுகாவலர்களுக்கு 13 ஆயிரம் ரூபாய் போனஸும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
