என்.எல்.சி நிறுவனம் மனசாட்சி இல்லாத நிறுவனம் என பாமக சட்டமன்ற உறுப்பினர் செளமியா அன்புமணி விமர்சித்துள்ளார். விளைநிலங்களை அழித்து, நிலத்தடி நீரை அந்த நிறுவனம் உறிஞ்சி எடுத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நிறுவனத்திற்காக நிலம் வழங்கிய மண்ணின் மைந்தர்களுக்கு உரிய முறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், நுழைவுத்தேர்வு நடத்தி ஆட்களை எடுப்பது ஏற்புடையதல்ல என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நுழைவுத்தேர்வு நடத்த இது என்ன மருத்துவப் படிப்பா என்றும் அவர் வினவியுள்ளார்.
