உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகரில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ரவி குமார் திவாகர், கடந்த நான்கு மாதங்களில் 10 குற்ற வழக்குகளில் 22 பேருக்கு மரண தண்டனை விதித்திருந்தார். இந்த நிலையில், அவரிடம் நிலுவையில் இருந்த 97 குற்ற வழக்குகளை மாவட்ட நீதிபதி திரும்பப் பெற்றுள்ளார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி ரவி குமார் திவாகர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்திருந்தாலும், உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் இன்றி அந்த தண்டனைகளை நிறைவேற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


