பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) ஏடிஎம் அல்லது வங்கி கிளைகள் மூலம் மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நிர்ணயிக்கப்பட்ட நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி (GST) கட்டணமாக வசூலிக்கப்படும் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.


