ரூ.62,500 கோடி மதிப்பீட்டில் புதிய செல்பேசி உற்பத்தி திட்டத்தை ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தியுள்ளார். உள்நாட்டு உற்பத்தி திறனை மேம்படுத்தி, உலகளாவிய சந்தையில் இந்திய நிறுவனங்களின் போட்டித்திறனை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் செல்பேசிகள் அடுத்த 10 முதல் 14 மாதங்களுக்குள் விற்பனைக்கு வரும் என அமைச்சர் தெரிவித்தார். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மொபைல் போன்களை ஊக்குவிப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், தாங்களே சொந்தமாக வடிவமைத்த மொபைல் போன்களை உருவாக்க வேண்டும். அத்துடன், அந்த வடிவமைப்பிற்கான அறிவுசார் சொத்துரிமை தங்களுக்குத்தான் சொந்தம் என்பதை அந்நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


