நிறுவனம் வழங்கிய மடிக்கணினிகளில் உள்ள ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் மென்பொருளைப் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் மறுத்துள்ளது. ஊழியர்களின் மடிக்கணினிகளில் எந்தெந்த செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் அவற்றில் எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பதை இந்த மென்பொருள் மூலம் கண்காணிக்க முடியும் என வெளியான தகவல்களைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் தனிப்பட்ட ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்படவில்லை என்றும், இணையப் பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க் மேலாண்மை போன்ற தொழில்நுட்ப நோக்கங்களுக்காக மட்டுமே இத்தகைய கருவிகள் பயன்படுத்தப்படுவதாகவும் டிசிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



