ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் பணிகளை முழுமையாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை இந்திய விண்வெளி ஆய்வு மையம் தொடங்கியுள்ளது. இது குறித்து ஒன்றிய அரசின் இன்-ஸ்பேஸ் (IN-SPACe) அமைப்பின் தலைவர் பவன் கோயங்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே 120 வகையான தொழில்நுட்பங்கள் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டன. இனிவரும் காலங்களில் இஸ்ரோ தனது தயாரிப்புப் பணிகளில் ஈடுபடாமல், விண்வெளி பயணத் திட்டங்கள் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சிகளில் மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்தும் என அவர் தெரிவித்தார்.


