டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் 42 நாட்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
500 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட பெரிய கட்டுமானத் தளங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்கள் மற்றும் டஸ்ட் போர்டல் (Dust Portal) தொழில்நுட்பம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


