நெய்வேலியில் நரேஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கோபியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கடந்த 16-ம் தேதி நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 9 கூட்டாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக இருந்த கோபியைப் பிடிக்க முயன்றபோது, காவல்துறையினர் அவரை இருமுறை காலில் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி கோபி, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


