தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோத கல் குவாரி மற்றும் அகழ்வாராய்ச்சி பணிகளால் பல மலைகள் மற்றும் குன்றுகள் காணாமல் போயுள்ளதாக அமைச்சர் பிரபு ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளார். பெரம்பலூர், மதுரை, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஏக்கர் பரப்பளவிலான மலைகள் கடந்த சில ஆண்டுகளில் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பெரம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலை (2006), கோனேரிபாளையம் மலை (2004) மற்றும் செங்குணம் மலை (2026) ஆகியவை காணாமல் போயுள்ளன. இதேபோல், மதுரை சர்க்கரை பீர் மலை (2003), கொண்டையம்பட்டி குன்று (2021), திருப்பத்தூர் அம்பூர்பேட்டை குன்று (2024), இராணிப்பேட்டை அனந்தலை மலை (1998) மற்றும் கோவையில் உள்ள இரண்டு குன்றுகள் (2022) எனப் பல இடங்கள் அழிந்துள்ளதாக அவர் பட்டியலிட்டுள்ளார். இந்த மலைகள் காணாமல் போனதற்கான புகைப்பட ஆதாரங்களையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.



