தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்தியாளர்களை அனுமதிக்காமல், சினிமா படப்பிடிப்பு போல நிகழ்வுகள் நடத்தப்பட்டதாக திமுக எம்எல்ஏ அம்பேஷ்குமார் விமர்சித்துள்ளார்.
முதலீட்டாளர்களைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தக் கூடாது என்றும், இந்த படப்பிடிப்பின் உச்சகட்ட காட்சி என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, சினிமா படப்பிடிப்பு என்ற வார்த்தை தேவையற்றது எனத் தெரிவித்துள்ளார். துபாய் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்குச் சென்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எத்தனை முதலீடுகளாக மாற்றப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பிய அவர், அந்தப் பயணங்களின் போது படப்பிடிப்பு நடத்தப்பட்டதா என்றும் வினவியுள்ளார்.



