தாம்பரத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள், இன்று முதல் மீண்டும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
ரயில்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

