சென்னையில் உள்ள நடிகர் தனுஷின் இல்லத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில முக்கிய நிர்வாகி ஒருவர் நேற்று முன்தினம் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி விஜய் அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில், முன்னணி நடிகரான தனுஷும் தனது ரசிகர் மன்றப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். விஜயைப் பின்பற்றி அவரும் அரசியலுக்கு வரத் தயாராகி வருவதாகப் பேசப்பட்டு வரும் சூழலில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பது வழக்கம் என்றும், அதன் அடிப்படையிலேயே இந்தச் சந்திப்பு நடந்ததாகவும், இதற்கு வேறு எந்த அரசியல் பின்னணியும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

