தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான அரசுப் பணி முன்னுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதாவிற்கு ஆளுநர் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தின்படி, நேரடி நியமனம் மூலம் அரசுப் பணிகளில் சேருபவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை வழங்கப்படும். இந்த நடைமுறை 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


