சட்டமன்றத்தில் குழாயடி சண்டைகளைத் தவிர்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவதன் மூலம், மக்கள் தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை நேரடியாகக் கண்காணித்து வருகின்றனர்.
சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பேசுகிறார்களா அல்லது தூங்குகிறார்களா என்பதை மக்கள் அறிய முடிகிறது. எனவே, நேரலையில் ஒளிபரப்பப்பட்டாலும் இல்லாவிட்டாலும், மக்கள் பிரதிநிதிகள் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.



