கோவை: PSG கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கலில் புழு இருந்ததாக புகார் எழுந்துள்ளது. மாணவர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருப்பதை கவனித்து, அதனை புகைப்படமாக பதிவு செய்துள்ளார்.
மாணவர்களின் உடல்நலத்துடன் நேரடியாக தொடர்புடைய விடுதி உணவின் தரம் மற்றும் சுகாதாரம் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.


