சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. தேனி மற்றும் கரூர் மாவட்டங்களில் விளைச்சல் குறைந்ததன் காரணமாக சந்தைக்கு வரும் வெங்காயத்தின் வரத்து சரிந்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.
இதேபோல் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்த மழையினால் பெரிய வெங்காயத்தின் வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.



