தேசிய அளவில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் அல்லாத கூட்டணியை அமைக்க வேண்டும் எனப் பல்வேறு மாநிலக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்த முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது.
திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை முன்னிறுத்தி இந்தக் கூட்டணியை கட்டமைக்கத் திட்டமிடப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சிறந்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.



