வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நிதியின் மூலம் அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பாலாறு மற்றும் வெள்ளாறு உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

