தமிழகத்தில் எச்1என்1 (H1N1) பன்றிக்காய்ச்சல் பாதிப்பு முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். காய்ச்சல் பரவலை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அவர் உறுதி அளித்தார்.
இந்தக் காய்ச்சலால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


