குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் கைலாஷ் யாத்திரை சென்ற 49 பேரின் நிலை குறித்துத் தகவல் ஏதும் இல்லை என அவர்களது உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
நேற்று காலை திபெத்தில் இருந்து உறவினர்களுடன் அவர்கள் தொடர்பில் இருந்தனர். அதன் பிறகு, தற்போது வரை அவர்களுடன் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.


