சகோதரரை தாக்கிய வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய மாநில நிதியமைச்சர் மரியவில்சனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் இங்கிலாந்தின் அரசர் அல்ல என்றும், நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் என்று அவர் கூற முடியாது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் பதவியில் இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜரானதை நீதிபதி சுட்டிக்காட்டினார். அமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்பே நீதிமன்றத்தில் ஆஜரானவர், தற்போது பதவியில் இருக்கும்போது மட்டும் ஆஜராக மாட்டேன் என்று கூறுவது ஏற்புடையதல்ல என நீதிபதி குறிப்பிட்டார்.

