திமுகவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவராகப் பொறுப்பேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் தனது எக்ஸ் தளத்தில் இந்த உறுதிமொழியைப் பகிர்ந்துள்ளார்.
கட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்குத் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். திமுகவின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டுள்ள சூழலில், இந்த முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.


