திமுகவின் மாவட்ட அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து, தற்போதுள்ள 77 மாவட்டங்களை 110 மாவட்டங்களாக உயர்த்தி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கொள்கை, அமைப்பு முறை, செயல்பாடு மற்றும் உடன்பிறப்பு ஆகிய நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் திமுக, காலந்தோறும் தன்னைத் தகுதியாக்கிக் கொள்கிறது. கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 15 முறை அமைப்பு ரீதியாகத் தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

