சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 48 பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில், 46 இடங்களில் ஈகோலை பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குடிநீரில் பாக்டீரியா பாதிப்பு இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாமன்றக் கூட்டத்தில் இது குறித்து ஆதாரங்களுடன் புகார் தெரிவித்த திமுக உறுப்பினர் ராஜூ, சென்னை மெட்ரோ குடிநீர் தரமற்றதாக உள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக குடிநீர் மாதிரிகள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

