திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கொல்லம்பட்டி பிரிவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் தனுஸ்ரீ (5), யோகா வர்ஷி (11), அனன்யா (6) மற்றும் மோசிகரன் (6) ஆகிய நான்கு சிறார்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


