தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் முதல் 100 நாள் செயல்பாடுகள் குறித்து புதிய தலைமுறை மற்றும் ஏ.ஆர்.ஜி (ARG) நிறுவனம் இணைந்து கருத்துக்கணிப்பை நடத்தியது. ஆகஸ்ட் 31, 2026 நிலவரப்படி, அரசின் செயல்பாடுகள் குறித்த மக்களின் மதிப்பீடு வெளியாகியுள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பில், அரசின் செயல்பாடுகள் 'மிக நன்று' என 30.06 சதவீதத்தினரும், 'நன்று' என 28.00 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், 18.39 சதவீதம் பேர் 'சுமார்' என்றும், 20.72 சதவீதம் பேர் 'அதிருப்தி' என்றும் தெரிவித்துள்ளனர். மீதமுள்ளவர்களில் 1.26 சதவீதம் பேர் மற்ற கருத்துக்களையும், 1.57 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க இயலாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

