திமுக மறுசீரமைப்பு குழுவினருடன் காணொளி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது, வயது வரம்பு காரணமாக தற்போது பதவியில் இருப்பவர்களில் பலரது பதவிகள் பறிபோகும் சூழல் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், யாரையும் கைவிடமாட்டோம் என அவர் உறுதியளித்தார். தகுதிக்கேற்ப அவர்களுக்கு வேறு பொறுப்புகள் வழங்கப்படும் என்றும், இளைஞர்கள் புதிய பொறுப்புகளுக்கு வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த மாற்றங்களுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

