சென்னை அடையாறில் தவெக நிர்வாகி கண்ணன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அடையாறு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை காவல்துறை தலைமை இயக்குநர் பிறப்பித்துள்ளார்.
இதே வழக்கின் விசாரணை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் ரோகிணியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


