காவலர் நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் காவல்துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குற்றங்களைத் தடுத்து, சட்ட ஒழுங்கைப் பேணுவதுடன், பேரிடர் காலங்களில் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதில் காவல்துறையினர் காட்டும் வீரமும் தியாகமும் போற்றத்தக்கவை என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் அமைதி நிலவவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றிப் பணியாற்றும் காவலர்கள் அனைவருக்கும் அவர் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களின் பணித்திறனை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளிக்கும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான நலத்திட்டங்களை உறுதிசெய்வதிலும் அரசு கவனம் செலுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


.jpg&w=3840&q=75)
