நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது. குற்ற எண் 7/2026-ன் கீழ் இந்திய தண்டனைச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை, கோவை, திருச்சி, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 30 இடங்களில் செப்டம்பர் 5, 2026 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர். இந்த சோதனையின்போது, டெண்டர் முறைகேடுகள் தொடர்பான 241 முக்கிய ஆவணங்கள் மற்றும் பல்வேறு மின்னணு ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

.jpg&w=3840&q=75)
