திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை மர்ம கும்பல் ஒன்று தூக்கிச் சென்றுள்ளது. இந்த இயந்திரத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.


