சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், யாரும் எழுந்து ஓட வேண்டாம் என்று அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், கையில் அருவா மற்றும் கம்புடன் அவர் வருகிறாரா என்று கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன், அவர் ஏற்கனவே கைகளால் சைகை காட்டி சீறி வருவதாகவும், இது ஒரு சினிமா போன்று இருப்பதாகவும் விமர்சித்தார். சட்டப்பேரவையில் பேசுவது சும்மா இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


